HomeDasa Mahaa Vidhya Rahsyam | தச மஹா வித்யா ரஹஸ்யம்
Dasa Mahaa Vidhya Rahsyam | தச மஹா வித்யா ரஹஸ்யம்
Dasa Mahaa Vidhya Rahsyam | தச மஹா வித்யா ரஹஸ்யம்
Standard shipping in 3 working days

Dasa Mahaa Vidhya Rahsyam | தச மஹா வித்யா ரஹஸ்யம்

 
₹90
Product Description

முன்னுரை:

பகவான் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஏற்றி வைத்த ஞான விளக்கை ஸ்ரீசங்கர பகவத்பாதாள் உலகம் முழுக்க ப்ரகாசிக்கச் செய்தார்கள். அன்னை பராசக்தியின் வழிபாட்டால் எந்தக் காரியமும் கைகூடுமென்றே இன்றும் ஆசார்யர்கள் பலர் இந்த ஞான விளக்கைப் ப்ரகாசிக்கச் செய்தனர்; செய்து கொண்டும் இருக்கின்றனர் என்பதும் கண்கூடு.


வடமொழியில் 'சக்தி' எனும் பதம் பெண்பாலில் அமைந்துள்ளது. பரமாத்மாவையும் பராசக்தியையும் ஜகத்திற்கு தந்தை தாயாக போற்றி தியானிப்பதால், தியான வலிமை ஏற்படுகிறது. ஸ்ரீவித்யா எனும் மார்க்கத்தில் அப்பராசக்தியை பரமாத்மா என்றே உபாசிப்பதும் சிறப்பு.


"மோஷைக ஹேது வித்யா து ஸ்ரீவித்யைவ ந சம்சய" எனும் வசனத்தால் மோக்ஷ சாதனமே ஸ்ரீவித்யை அல்லது ப்ரஹ்ம வித்யை. இந்த ஸ்ரீவித்யை வழிபாடு பாமர மக்களுக்கும் நல்க வேண்டுமென ப்ரஹ்மஸ்ரீ சிதாநந்தநாதர் (சார் ஸுப்ரமண்ய ஐயர்) அவர்களின் நோக்கமும் அருட்பார்வையும் நம் அனைவராலும் வணங்கி போற்றத்தக்கது என்பதும் நாம் அறிந்ததே. அன்னாரின் சிஷ்யரான சாஸ்திர ரத்னாகர ஆத்ம வித்யா பூஷணம் இஞ்சிக்கொல்லை ப்ரஹ்மஸ்ரீ ஜகதீச்வர சாஸ்திரிகளின் பங்கும் அவர்தம் உபந்யாஸங்களும் ஸ்ரீவித்யா உலகில் பிரசித்தம்.


இப்புத்தகத்தின் அரிய அம்சங்கள் கீழ் வருமாறு:-

  • தச மஹா வித்யை ஆவிர்பாவம். (தச மஹா வித்யை தோன்றிய திக்குகள்)
  • தச மஹா வித்யை மந்த்ரங்களின் ரிஷி, சந்தஸ், பீஜம், சக்தி, கீலகம், கரந்யாஸம், த்யானம் மற்றும் அங்கந்யாஸம் ஆகியவைகளுடன் கூடியது. (இவைகள் தனித்தனியே ப்ரமாண புரச்சரமாக வெளியிட்டுள்ளது. எங்கள் பூஜ்ய குருவின் ஆழ்ந்த அறிவுக்கும் உபாசனைக்கும் சான்று)
  • இந்த தசமஹா வித்யையின் பேதங்கள், ஸ்வரூபம், நிபந்தனைகள் மற்றும் பலன்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
  • ஆங்காங்கு த்யான ச்லோகமும் அதன் விளக்கமும் நன்கு விவரிக்கப்பட்டுள்ளன.


Share

Secure Payments

Shipping in India

International Shipping

Great Value & Quality
Create your own online store for free.
Sign Up Now