முன்னுரை:
பகவான் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஏற்றி வைத்த ஞான விளக்கை ஸ்ரீசங்கர பகவத்பாதாள் உலகம் முழுக்க ப்ரகாசிக்கச் செய்தார்கள். அன்னை பராசக்தியின் வழிபாட்டால் எந்தக் காரியமும் கைகூடுமென்றே இன்றும் ஆசார்யர்கள் பலர் இந்த ஞான விளக்கைப் ப்ரகாசிக்கச் செய்தனர்; செய்து கொண்டும் இருக்கின்றனர் என்பதும் கண்கூடு.
வடமொழியில் 'சக்தி' எனும் பதம் பெண்பாலில் அமைந்துள்ளது. பரமாத்மாவையும் பராசக்தியையும் ஜகத்திற்கு தந்தை தாயாக போற்றி தியானிப்பதால், தியான வலிமை ஏற்படுகிறது. ஸ்ரீவித்யா எனும் மார்க்கத்தில் அப்பராசக்தியை பரமாத்மா என்றே உபாசிப்பதும் சிறப்பு.
"மோஷைக ஹேது வித்யா து ஸ்ரீவித்யைவ ந சம்சய" எனும் வசனத்தால் மோக்ஷ சாதனமே ஸ்ரீவித்யை அல்லது ப்ரஹ்ம வித்யை. இந்த ஸ்ரீவித்யை வழிபாடு பாமர மக்களுக்கும் நல்க வேண்டுமென ப்ரஹ்மஸ்ரீ சிதாநந்தநாதர் (சார் ஸுப்ரமண்ய ஐயர்) அவர்களின் நோக்கமும் அருட்பார்வையும் நம் அனைவராலும் வணங்கி போற்றத்தக்கது என்பதும் நாம் அறிந்ததே. அன்னாரின் சிஷ்யரான சாஸ்திர ரத்னாகர ஆத்ம வித்யா பூஷணம் இஞ்சிக்கொல்லை ப்ரஹ்மஸ்ரீ ஜகதீச்வர சாஸ்திரிகளின் பங்கும் அவர்தம் உபந்யாஸங்களும் ஸ்ரீவித்யா உலகில் பிரசித்தம்.
இப்புத்தகத்தின் அரிய அம்சங்கள் கீழ் வருமாறு:-