வேதங்களைப் பற்றிப் பேசும்போது, ஸ்ருதி, ஸ்மிருதி, புராணம், சதுர்வேதம், ரிக், யஜூர், சாம, அதர்வண, வேதாந்த, உபநிடதங்கள் முதல் ஆரண்யகம், காவியம் வரையிலான பெயர்களைக் கேள்விப்படுகிறோம். இவையெல்லாம் என்ன? ஒன்றேதானா? வெவ்வேறா? இவை வேதத்தின் உள்ளே இருப்பனவா? உட்பிரிவுகளா? வேதங்கள் ஒரு மதத்தினருக்கோ ஒரு சாதியினருக்கோ உரித்தானதா? மற்றவர்கள் ஓதலாமா? இவ்வாறு பற்பல சந்தேகங்களைத் தீர்க்க முயலும் நூல் இது. ஆதாரப்பூர்வமாகப் புரிந்துகொள்ள முயல்வதில் தவறேதும் இல்லை.
இக்கால மக்கள் புரிந்துகொள்ளும் முறையில் இப்புத்தகத்தை எழுதியுள்ளார் முனைவர் ராமமூர்த்தி. வேதங்கள், உபநிடதங்கள் கூறிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதைப் பற்றிய வழிகாட்டுதலையும் இந்த நூல் தருகிறது. வேதம் கூறிய நல்வாழ்க்கை நெறியைப் பின்பற்றி அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற சுகானந்த வாழ்வை இந்த நூல் பரிந்துரைக்கிறது